தனது விருப்பத்தைத் திணிக்கும் பொருளாதாரத் திறன் அமெரிக்காவிடம் இல்லை - ரணில்
உலகின் பிற பகுதிகளின் மீது தனது விருப்பத்தைத் திணிக்கும் பொருளாதாரத் திறன் அமெரிக்காவிடம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் குறித்த அறிக்கையில்,
1950இல் அமெரிக்கா, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% பங்கைக் கொண்டிருந்தது. இன்று அது 25%ஆக மட்டுமே, உள்ளது. சீனா 19% மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் 13%. திறனைக் கொண்டுள்ளன.
அதிக கட்டணங்கள்
இந்தநிலையில், அமெரிக்காவின் அதிக கட்டணங்கள் கிழக்கு ஆசியாவிலிருந்து தெற்காசியா வரை ஆசியாவின் உற்பத்தித் திறனை அழிக்க முயல்கின்றன. இது, அவுஸ்திரேலியாவையும் பாதிக்கிறது.
அத்துடன், இந்தோ - பசிபிக் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. இது பிராந்தியத்தில் தைவானுக்கான ஆதரவையும் பலவீனப்படுத்தும் என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியாவில் பல குறைந்த ஊதியம் பெறும் வேலைகள் பாதிக்கப்படும்.
சீனாவின் பதில்
அதேநேரம், பொதுமக்களின் ஆதரவு இப்போது சீனாவை நோக்கி நகரும். உலகின், பல பகுதிகளில் சீனா வலுவாக உள்ளது.
எனவே, முழு உலகமும் பாதிக்கப்படும்போது, சீனா, அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க இதுவே சிறந்த நேரம், எனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.
அமெரிக்காவுக்கு ஒரு பதிலை, அந்த நாடு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது - என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |