ராஜபக்சக்கள் தொடர்பாக ரணில் சஜித்திற்கு விடுத்துள்ள அழைப்பு
எனக்கு ராஜபக்சக்களைப் பாதுகாக்க வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது எனவும் ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராகக் குற்றப் பிரேரணை வந்தபோது அவரை மட்டுமே பாதுகாத்துள்ளேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“கட்சியைவிட தாய் நாடுதான் எமக்கு முக்கியம். தாய் நாட்டை நேசித்துவிட்டுதான் நாம் கட்சியை நேசிப்போம்;. ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் செயற்பட்டுள்ளனர்.
நம்பிக்கையின் அடிப்படையில்தான் சவாலை நான் பொறுப்பேற்றேன். அதற்கு மொட்டுக் கட்சியிலும் ஆதரவு வழங்கியது. அந்தக் கட்சியின் ஆதரவு இருந்ததால்தான் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது.” என அவர் தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri