ரணில் -பசில் அணிக்குள் கடும் மோதல்:தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்
பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடுவார் என பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கையை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என ஜனாதிபதி சூசகமாகத் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வந்தாலும், ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன என்ற ரீதியில் நிச்சயமாக ஆதரவு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சரும், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,