சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்தார் ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் தனது சிகிச்சைகளை முடித்துக்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் சிவதாசன் அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டாக தெரிவிக்கப்படுகின்றது.
கோரிக்கை
சிகிச்சையின் பின்னர் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது பூரண குணமடைந்து (09) இன்று நாடு திரும்பியுள்ளார்.

அதன்படி, அவர் வீட்டிலிருந்தே அரசியல் பணிகளை மேற்கொள்ள எண்ணியுள்ளதாக கூறப்படுகிறது.
சிங்கள புத்தாண்டுக்கு பிறகு ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்ப வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு முழுமையாக குணமடைந்து நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், அரசியல்வாதிகள் பலர் அவரிடம் நலம் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 20 மணி நேரம் முன்
ஸ்ரீலீலா ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. ஷார்ட் உடையில் பார்பி போல வந்த வீடியோ Cineulagam