சந்திரிகாவால் மறைக்கப்பட்ட பட்டலந்த வதை முகாம் அறிக்கை! அம்பலமான தகவல்
பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மறைத்ததன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க பயமின்றி அதனை புறக்கணிப்பதாக முன்னணி சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பட்டலந்த ஆணையத்தின் பரிந்துரைகளை நமைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, முன்னிலை சோசலிசக் கட்சி நேற்று ஊடக சந்திப்பை நடத்தியது.
இதில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சட்டவிரோத ஆயுதங்கள்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கோட்டாபய ராஜபக்சவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், அவருக்குப் பிறகு ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க, தனது கடந்தகால நடைமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டார்.
ஜூலை 22, 2022 அதிகாலையில், காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்களை அவர் மிகவும் தீர்க்கமான முறையில் தாக்கினார்.
எந்த இராணுவம், எந்தப் பிரிவு, எந்தக் காவல் குழு சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்பது இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை.
பட்டலந்த விவகாரம்
இது போலவே பட்டலந்த விவகாரத்திலும் ரணில் மீது பாரிய குற்றங்கள் காணப்படுகின்றன.
குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகளையும், அந்தக் குற்றங்களுக்குத் தலைமை தாங்கிய அரசியல் தலைவர்களையும், தன்னையும், செய்த குற்றங்களுக்குப் பொறுப்பேற்காத அரசையும் ரணில் பாதுகாத்து வருகிறார்.
அதே போலவே அன்று பட்டலந்த கமிஷன் அறிக்கையை மறைத்து சந்திரிகாவும் ரணிலை பாதுகாத்தார்.
சந்திரிகா தனது வகுப்பினருக்கான கடமையைச் செய்ததால், அது ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை அல்ல என்று ரணில் எந்த பயமும் இல்லாமல் சொல்லிவருகிரார் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
