வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில்..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று அதிகாலை 12:22 மணிக்கு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்ரமசிங்க உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உடல் நிலை..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (22.08.2025) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவர், நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது அவரை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அதற்கமைய, ரணில் விக்ரமசிங்க பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில் தற்போது மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
