மோசமடையும் ரணிலின் உடல்நிலை.. சிங்கப்பூர் கொண்டு செல்ல ஆலோசனை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயர் இரத்த அழுத்தம் சீராகாத நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் அவரை சிங்கப்பூர் கொண்டு செல்லுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்ரமசிங்க, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் கடும் கண்காணிப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிர சிகிச்சை பிரிவு
இருப்பினும், அவரின் உடல்நிலை, அதாவது உயர் இரத்த அழுத்தம் சீராகாத நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் அவரை சிங்கப்பூர் கொண்டு செல்லுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று குற்றபுலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டார்.
இதனை தொடர்ந்து, அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர், நள்ளிரவில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




