தீவிர கண்காணிப்பில் ரணில்! வெளியான புகைப்படம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, ரணில் விக்ரமசிங்கவின் வயது மற்றும் மருத்துவ அறிக்கைகளை கருத்திற் கொண்டு, முதல் 24 மணித்தியாலங்கள் அவரை வைத்தியசாலையில் தீவிர கண்காணிப்பில் வைப்பது பொருத்தமானது என வைத்திய நிபுணர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதிதீவிர சிகிச்சைப் பிரிவு
எனவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவர், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கடுமையான கண்காணிப்பு
இந்நிலையிலே, தற்போது முதல் 24 மணித்தியாலங்கள் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்தியசாலையில் வைப்பது பொருத்தமானது என வைத்திய நிபுணர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு வீட்டு உணவை வழங்குவதற்கான அனுமதியை சிறைச்சாலை தலைமையகம் வழங்கியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க நேற்று (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




