ஜனாதிபதி இல்லம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம்: ஒருவர் கைது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.
கொட்டதெனிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிபவர் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி காட்சிகளை நீதிமன்றில் முன்வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் திலின கமகே குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
