எதிர்ப்பு வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியின் கடுமையான அறிவுறுத்தல்
எதிர்ப்பு வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையான அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வராமல் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது சாத்தியமில்லை.
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரேனும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டால், அதற்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சிகளோ சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டால் நெருக்கடிக்கு அவர்களே தீர்வுகளை வழங்கவேண்டும் எனவும் அவர் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் சர்ச்சைகளையும் தாண்டி மாற்றத்தை ஏற்படுத்திய ரணில் - மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறுமா... |