ரங்க திஸாநாயக்கவின் நியமனத்தில் எதிர்க்கட்சிக்கு தொடர்பில்லை! வெளிவரப் போகும் தகவல்கள்
இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க நியமனத்தில் எதிர்க்கட்சிக்கு எந்தவொரு தொடர்பும் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியான அஜித் பெரேரா எம்.பி. ஆகியோரைக் கொண்ட அரசியலமைப்புப் பேரவை மூலமாகவே ரங்க திஸாநாயக்க நியமனம் செய்யப்பட்டதாக அண்மையில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிலித்திருந்தார்.
பொதுவாக அரசியலமைப்பு பேரவை நிகழ்வுகள் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு வந்தாலும், அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அதனை மீறியுள்ளார்.
பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படலாம்
இதற்கிடையே, ரங்க திஸாநாயக்கவின் பெயர் இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவரோ நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேராவோ அதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.
அவ்வாறான பின்னணியில், அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் கூற்றின் ஊடாக பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படலாம் என்பதால் இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தல் ஒன்றை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 10 மணி நேரம் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri
