31 கைத்தொலைப்பேசி விவகாரத்தில் சிக்கப்போகும் தமிழ் அரசியல்வாதிகள்
பாதாள உலகக் கும்பலை சேர்ந்த கெஹல் பத்தர பத்மேயிடமிருந்து கிடைக்ககூடிய தகவல்கள் தென்னிலங்கையில் மட்டுமில்லாது வடக்கு-கிழக்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பாதாள உலகக் கும்பலை சேர்ந்த கெஹல் பத்தர பத்மே 31 தொலைபேசிகளை பயன்படுத்தி பல்வேறு தொடர்புகளை பேணிவந்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்த 31 தொலைபேசி அழைப்புகளில் அரசியல்வாதிகளும் அடங்குகின்றனர், அதில் வடக்கு - கிழக்கிலுள்ள அரசியல்வாதிகளும் உள்ளடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கெஹல் பத்தர பத்மேயின் விசாரணை வலயத்திற்குள் வட மாகாணத்தை சேர்ந்த இரண்டு அரசியல்வாதிகளும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 அரசியல்வாதிகளும் உள்ளடங்கப்பட்டுள்ளார்கள் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த விசாரணைகள் இடம்பெறும் போது சில அரசியல்வாதிகள் தாமாகவே முன்வந்து கிளர்ந்தெழுகின்றார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam