ரணவிரு கிராம மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: நஸீர் அஹமட் உறுதி

Kurunegala Naseer Ahamed North Western Province
By Uky(ஊகி) Jun 10, 2024 10:26 PM GMT
Report
Courtesy: uky(ஊகி)

குருநாகல் மாவட்டத்தின் ரணவிரு கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்த்துவைப்பது தொடர்பாக வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட்(Naseer Ahamed)  கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தின் இப்பாகமுவ பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ரணவிரு கிராமம், சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாகும்.

யுத்தத்தினால் அங்கவீனமுற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் என ஆரம்பத்தில் நூறு குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டிருந்தனர். தற்போதைக்கு சுமார் அறுநூறு குடும்பங்கள் அங்கு வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இந்தியாவின் கைத்தொழில் வலயம்: ஜெய்சங்கர் உறுதி

திருகோணமலையில் இந்தியாவின் கைத்தொழில் வலயம்: ஜெய்சங்கர் உறுதி

காணி உறுதி வழங்கப்படாமை 

 இந்நிலையில் ரணவிரு கிராம மக்களின் காணிகளுக்கு இதுவரை காலமும் காணி உறுதி வழங்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து குருநாகல் நகர மத்தியில் இன்று (10.06.2024) அங்கவீனமுற்ற படை வீரர்கள், உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட சுமார் இருநூறு பேரளவிலானோர் குருநாகல் நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

ரணவிரு கிராம மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: நஸீர் அஹமட் உறுதி | Ranaviru Village People S Problems Solved Soon

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் படை வீரர்களின் பிரதிநிதிகள் குழுவொன்று தங்களது பிரச்சினைகள் தொடர்பில் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள், அங்கவீனமுற்ற படைவீரர்கள் மற்றும் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தான் கரிசனையுடன் செயற்படுவதாகவும் ஆறுதல் தெரிவித்தார்.

ஒரே ஓடுபாதையில் பயணித்த 2 விமானங்களினால் பதற்றம்

ஒரே ஓடுபாதையில் பயணித்த 2 விமானங்களினால் பதற்றம்

 ரணவிரு கிராமம்

அதன் போது ரணவிரு கிராமம் உள்ளிட்ட அங்கவீனமுற்ற மற்றும் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினர் மேற்கொண்ட போராட்டங்களில், ஆளுனர் ஒருவர் , போராட்டக்களத்துக்கு நேரடியாக வருகை தந்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த முதலாவது சம்பவம் இதுவாகும்.

ரணவிரு கிராம மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: நஸீர் அஹமட் உறுதி | Ranaviru Village People S Problems Solved Soon

இதனை சுட்டிக்காட்டிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நெகிழ்ச்சியுடன் ஆளுனர் நஸீர் அஹமட்க்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

போராட்டக்காரர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி, துரித கதியில் அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக ஆளுனர் இதன் போது உறுதியளித்தார்.

ஆளுனரின் உறுதியைளிப்பைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

யாழில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் கைதான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

யாழில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் கைதான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US