தலைப்பிறை தென்பட்டது!.. புனித ரமழான் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு

Dev
in முஸ்லிம் சமூகம்Report this article
இலங்கையின் (Sri Lanka) பல பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் நாளை (10) ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் தினம் (Sri Lanka) என கொழும்பு பெரிய பள்ளிவாசலால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (09) மாலை தென்பட்டமை உறுதிபபடுத்தப்பட்டமையினால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை நோன்பு பெருநாளை கொண்டாடவுள்ளனர்.
புனித ஷவ்வால் மாத தலைப் பிறையினை தீர்மானிப்பது தொடர்பாக கொழும்பு (Colombo) பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற பிறைக்குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட ஆலோசனை
நாட்டின் ஒரு சில இடங்களில் பிறை தென்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பிறை காணப்பட்ட விடயத்தை உறுதிப்படுத்த சில மணித்தியாலங்கள் சென்றுள்ளது.
இதனையடுத்து, மிக நீண்ட ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின் பின்னர் பிறைக்குழுவினால் ஏகமனதாக குறித்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |