இலங்கையில் தலைமறைவாகியிருந்த வெளிநாட்டு பெண்ணுக்கு கடுங்காவல் தண்டனை
இலங்கையில் தலைமறைவாகி இருந்த ரஸ்ய பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு ரஷ்யாவில் (Russia) பத்து மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த அலெனா அகபோனோவா (Alena Agafonova) எனப்படும் 23 வயதான பெண் ஊடகவியலாளர் ரஷ்யாவின் புகழ்பெற்ற போர் சிலையின் மார்பகத்தை கொச்சைப்படுத்தியதன் குற்றத்திற்காகவே இவ்வாறு தண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
இந்த பெண், கடந்த ஆண்டு தென்மேற்கு ரஷ்யாவில் உள்ள 'தாய்நாடு அழைக்கிறது' (The Motherland Calls) எனப்படும் நினைவுச்சின்னம் குறித்த காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் காணொளி
அந்த காணொளியில், அவர் சிலையின் மார்பகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார். 

இதன் பின்னர், அலெனா அகபோனோவா தமது காணொளியை வெளியிட்ட உடனேயே இலங்கையில் தலைமறைவானார்.
அவர் ரஷ்யாவின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு கடந்த பெப்ரவரி மாதத்தில் தனது தாய்நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
சுமார் 279 அடி உயரத்தில் ஒரு பெண்ணின் வாளைக் காட்டி இந்த நிற்கும் சிலையானது, இரண்டாம் உலகப் போரின் மிகவும் காவியமான போர்களில் ஒன்றான "ஸ்டாலின்கிராட் போரின் ஹீரோக்கள்" நினைவாக உள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இது 1967இல் உலகின் மிக உயரமான சிலையாக அறிவிக்கப்பட்டதுடன் ஆசியாவிற்கு வெளியே கிழக்கு அரைக்கோளத்தில் உள்ள மிக உயரமான சிலை ஆகும்.

இதற்கமையவே, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சமூக ஊடகங்களில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவரது எதிர்கால வருமானத்தில் 10 வீதத்தை அரசுக்கு அபராதமாக
செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ரஷ்யாவில் உள்ள நீதிமன்றங்களின் பிற தீர்ப்புகளுடன் ஒப்பிடும்போது இந்த தண்டனை எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளதென கருத்து வெளியாகியுள்ளது.
அத்துடன், அதிகாரிகளின் உத்தரவின் அடிப்படையில் மன்னிப்புக்கோரும் காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        