இஸ்ரேல் - ஹமாஸ் போரின் அடுத்த கட்டம்: உள்நுழைய தயாராகும் ரஷ்யப்படை
பாலஸ்தீனத்திற்கு உதவ தமது இராணுவப்படைகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவின் துணை இராணுவ படையான செச்சென் படையின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் தெரிவித்துள்ளார்.
இந்த படையின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் கூறுகையில்,
“இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அதேபோல மேற்கு நாடுகள், போராளிகளை அளிப்பதாக கூறிக்கொண்டு பொதுமக்களை கொல்வதை தவிர்க்க வேண்டும்.
அமைதி காக்கும் படை
இந்த போரில் நாங்கள் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறோம். நாங்கள் இந்த போருக்கு எதிராக இருக்கிறோம். இது ஏனைய மோதல்களைப் போலல்லாமல் மேலும் அதிகரிக்கலாம்.
Chechen leader Ramzan Kadyrov:
— Arslan Baloch (@balochi5252) October 10, 2023
We fully support Palestine's actions. Their lands were once taken away by Israel and isolated. I am ready to send the Chechen army to Bethlehem and Gaza.#حماس #طوفان_الاقصى_ #Isreal #Palestine
pic.twitter.com/AeLdyvsPXI
மத்திய கிழக்கில் ஒழுங்கை மீட்டெடுக்க அமைதி காக்கும் படையாக செச்சென் படை பிரிவுகளை நிலைநிறுத்த தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் வாக்னர் படை ஒரு கட்டத்தில் அரசுக்கு எதிராக திரும்பியபோது அதை எதிர்த்து சண்டையிட்டது இந்த துணை இராணுவ படைதான்.
ஈரான் இந்த போரில் பாலஸ்தீனத்திற்கு உதவுவதாக இஸ்ரேல் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. எனினும் ஈரான் அதை மறுத்துள்ளது.
இஸ்ரேல் பேரழிவை சந்திக்கும்
மேலும், “ஏதாவது ஒரு குண்டு ஈரான் பக்கம் திரும்பினால் இஸ்ரேல் பேரழிவை சந்திக்க நேரும்” என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அமெரிக்காவின் போர் கப்பல் USS Gerald R Ford தற்போது காசாவுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த போரில் அமெரிக்க படை, இஸ்ரேலுடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால் ரஷ்யாவும், சீனாவும் சேர்ந்து ஈரானுக்கு ஆயுத உதவிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர் ஈரான்தான் ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் ஆதிக்கம் மிக்க நாடாக மாறும் நிலை ஏற்படும் என ஆய்வாளர்களின் கருத்துக்களில் கூறப்படுகின்றன.
இந்நிலையில், தற்போது ரஷ்யாவின் துணை இராணுவ படைகளில் ஒன்றான செச்சென் பிரிவு பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்த விடயம், இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.