நீங்களும் இறப்பீர்கள்: இஸ்ரேல் பிரதமருக்கு துருக்கி அமைச்சர் எச்சரிக்கை
துருக்கியின் தேசிய கல்வி துறையின் துணை அமைச்சர் நஜிப் இல்மாஸ், நெதன்யாகுவின் டுவிட்டர் பதிவை பகிர்ந்து அதற்கு பதிலளித்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள்.
5ஆவது நாளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.
நெதன்யாகுவின் பதிவு
ஹமாஸ் அமைப்பை கத்தார், ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் ஆதரிக்கின்றன.
மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என தெரிவித்திருந்தார்.
எனினும், இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.
இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தாக்குதல்களை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார்.
ממשיכים בכל העוצמה pic.twitter.com/2ZTfc2zlin
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) October 10, 2023
வான்வழி தாக்குதல்
அதில், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் கட்டிடங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல் நடத்த கூடிய காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
“எங்கள் முழு பலம் கொண்டு நாங்கள் தாக்குதலை தொடர்ந்து வருகிறோம்” என குறித்த பதிவுக்கு தலைப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில், துருக்கியின் தேசிய கல்வி துறையின் துணை அமைச்சர் நஜிப் இல்மாஸ், நெதன்யாகுவின் டுவிட் பதிவை பகிர்ந்து அதற்கு பதிலளிக்கும் வகையில் மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒரு நாள், உங்கள் மீதும் தாக்குதல் நடத்துவார்கள். நீங்களும் மரணம் அடைவீர்கள்” என தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
