மஹிந்தவினால் கோட்டாவுக்கு வழங்கப்பட்ட புத்தகத்தின்படியே றம்புக்கண கொலை! நாடாளுமன்றில் குற்றச்சாட்டு
30 ஆண்டுளாக அரச பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருந்த தமிழர்கள் பட்ட வேதனைகளை சிங்கள சகோதரர்கள் அனுபவிக்கக்கூடாது என்பதை தாம் விரும்புவதாக தமிழ் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போது அவருடைய சகோதரான கோட்டாபய ராஜபக்சவுக்கு சட்டப்புத்தகம் ஒன்று வழங்கப்பட்டது.
மனிதாபிமான சட்டப்புத்தகமே அதுவாகும். அந்த சட்டப்புத்தகத்தை பயன்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச இனவழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.
இந்த புத்தகம் இன்றும் அவரால் வழிநடத்தப்பட்ட படையினர் மற்றும் பொலிஸ் உறுப்பினர்களிடம் இருப்பதாக கஜேந்திரன் குறிப்பிட்டார்
இந்தநிலையில் குறித்த புத்தகத்தை பயன்படுத்தியே நேற்று ரம்புக்கனையிலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த சட்டப்புத்தகத்தில் தங்களை எதிர்ப்போரை கண்மூடித்தனமாக கொலை செய்து கற்பழித்து, பெக்கோவை கொண்டு அவர்களை புதைத்து விடுமாறு கூறப்பட்டுள்ளதாக கஜேந்திரன் குறிப்பிட்டார்.



