ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்களை விடுவிக்க வலியுறுத்தி நேற்று(29) காலை அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 கடற்தொழிலாளர்களை விடுவிக்க கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடற்தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ராமேஸ்வரத்தில் உள்ள சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக கடற்தொழிலாளர்கள் நாளைய தினம் வேலை நிறுத்த ஆர்ப்பட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ராமேஸ்வரத்தில் உள்ள சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம்
மேலும் இலங்கை அரசாங்கத்தின் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு கடற்தொழிலாளர் சங்கத்தினரும் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன் திடீரென கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இன்று (28) அனைத்து கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் கடற்தொழிலாளர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் நேற்று (27) மாலை ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற நிஷாந்த் என்பவருக்கு சொந்தமான ஒரு படகையும் அதிலிருந்த 6 கடற்தொழிலாளர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னாருக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்திய கடற்தொழிலாளர்கள்
மேலும் இலங்கை, இந்திய கடற்தொழிலாளர் பற்றிய பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த மத்திய, மாநில அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதனிடையே இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமான ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு கடற்தொழிலாளர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன் திடீரென கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்பு தொழிலாளர் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.
தினசரி அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் மீன்பிடித்தொழில் நடைபெறாததால் நாளொன்றுக்கு 50 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து ராமேஸ்வரம் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர்.ஜேசுராஜா
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 47 நிமிடங்கள் முன்

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri
