கண்டி அதிவேக பாதையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை:வெளியான தகவல்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை-கலகெதர பகுதியின் கட்டுமானத்திற்கான டெண்டர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின், டெண்டர் விவரங்களை https://rda.gov.lk/index.php?option=com_inquirie என்ற இணைப்பில் பெறலாம்.
அரசாங்கத்தின் அறிவிப்பு
கடந்த ஆண்டு நவம்பரில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டத்தின் ரம்புக்கனை-கலகெதர பிரிவின் கட்டுமானத்தை உள்ளூர் நிதியைப் பயன்படுத்தி ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு உள்ளூர் நிதியைப் பயன்படுத்தி ரம்புக்கனை-கலகெதர பிரிவின் கட்டுமானத்தைத் ஆரம்பிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, ரம்புக்கனை-கலகெதர பிரிவு வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானம் உட்பட பல வீதி அபிவிருத்தித் திட்டங்கள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam