மாற்றுத்திறனாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் போராளிகள்..! குரல் கொடுத்த அர்ச்சுனா
என்றோ ஒருநாள் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக உடுத்திய உடையுடன் பாடசாலை பைகளுடன் போராடிய சகோதரர்கள் இன்று மாற்றுத்திறனாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(8) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ஆனால் நாம் அதனை வைத்து அரசியல் செய்துக்கொண்டிருக்கின்றோம்.
எம் மக்கள் இந்த அரசியல்வாதிகளின் மீது வைத்திருந்த நம்பிக்கையீனத்தால் தான் நான் நாடாளுமன்றத்திற்கு வந்தேன்.
வடக்கு-கிழக்கை உற்றுப்பாருங்கள், அங்கே கையில்லாமல், காலில்லாமல், கண்ணில்லாமல் பல உறவுகள் இருக்கின்றனர். ஆனாலும் புலம் பெயர்ந்த உறவுகள் எம்முடைய சகோதரர்களை பார்த்துக்கொள்வார்கள்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை எடுங்கள், எங்களையும் சமமாக நடத்துங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம் News Lankasri

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri
