கிழக்கு ஆளுநரின் ரமழான் நோன்பு வாழ்த்து செய்தி
”ஈதுல் ஃபித்ர்” எனும் ஈகை பெருநாளை உவகையுடன் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ரமழான் நல்வாழ்த்துக்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்துச் செய்தியில், “இஸ்லாத்தின் புனித நூலான அல்-குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வகையில் அனுட்டிக்கப்படும் ஒரு மாத கால ரமழான் (Ramadan) நோன்பின் மூலம் மத ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உலகிற்கு மிக முக்கியமான செய்தி வெளிப்படுத்தப்படுகிறது.
இஸ்லாமிய மக்கள்
மனித குலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி தூய்மை உணர்வோடு புனித ரமழான் மாதத்தில் நோன்பிருந்து ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனை தொழுது, இஸ்லாமியப் பெருமக்கள் ரமழான் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
எளியோர்க்கு ஈந்து நோன்புக் கடமைகளை நிறைவேற்றி, ரமழான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
