இலங்கை கடற்படையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது: இந்திய தரப்பு சாடல்
இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் அயல்நாடான, இலங்கை தனது பழைய நாட்களை மறந்து வருவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மையில் இதற்கு முன்னரும் இலங்கை கடற்படையின் இத்தகைய நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
கச்சதீவுக்கு(Kachchatheevu) அருகில் நேற்று இந்திய கடற்றொழிலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
எனினும் இலங்கையின் கடற்படை இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இதற்கிடையில் மோசமான நாட்களில் இலங்கைக்கு இந்தியா உதவியது.

2022 ஆம் ஆண்டில், இலங்கையில் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை.
இந்த நெருக்கடியான நேரத்தில், இந்தியா தனது அண்டை நாட்டுக்கு திறந்த மனதுடன் உதவியது. மற்றும் உணவு தானியங்கள் தவிர அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்கியது.
இதனால் இலங்கையின் பல பெரிய தலைவர்கள் இந்தியாவின் இந்த மகத்துவத்தை பாராட்டியுள்ளனர்." என்றும் இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri