சிறையில் வாடும் ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி ஆரம்பமானது..
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் பௌத்த துறவிகளின் மத உரிமைகளுக்காக மகா சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரை, இரண்டாம் நாளாக இன்று (11) கடுங்கன்னாவையிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று புறப்பட்ட இந்தப் பாதயாத்திரை கேகாலை நகரத்தை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர் பேரணி
"சீவரத்திற்கான நீதி - தேசிய சபதம் மற்றும் சுதந்திரத்திற்கான பாதயாத்திரை" என்ற பெயரில் நேற்றைய தினம் (10) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி, முதல் நாளில் கடுங்கன்னாவையை வந்தடைந்ததும் நிறைவடைந்தது.

இரண்டாம் நாள் பயணம் இன்று கேகாலை நகரத்தை சென்றடைவதுடன் நிறைவடைந்து, கேகாலையிலிருந்து வரகாபொல வரையிலான மூன்றாம் நாள் பயணம் நாளை (12) நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.