யாழில் நாளை சர்வதேச விசாரணை கோரி பேரணி முன்னெடுப்பு
செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் நாளைய தினம்(13.09.2026) பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும் சான்று பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனித புதைகுழி காணப்படுகிறது.
துண்டுப்பிரசுரங்களை வழங்கிவைத்து
அதனால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என கோரியே பேரணி நடைபெறவுள்ளது.

நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா காரியாலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகவுள்ள பேரணி, கிட்டுப்பூங்கா பகுதியில் நிறைவடையவுள்ளது.
இந்த பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ் தேசிய பேரவையினாரால் நேற்றைய தினம் சனிக்கிழமை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர பிதா டக்ளஸ் போல், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கிவைத்து போராட்டத்திற்கு ஆதரவு கோரினர்.

