கொழும்பில் பிரதமர் அலுவலகத்திலிருந்து ரஷ்ய தூதரகம் வரை கவனயீர்ப்பு பேரணி (Video)
கொழும்பில் இன்றைய தினம் பிரதமர் அலுவலகத்திலிருந்து ரஷ்ய தூதரகம் வரை கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கவனயீர்ப்பு பேரணி
தற்போது நிறுத்தப்பட்டுள்ள இலங்கை - ரஷ்யாவிற்கான விமானங்கள் மீண்டும் இயங்க வேண்டுமென கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் பிரதமர் அலுவலகத்தில் கடிதமொன்றை கையளித்துள்ள அதேவேளை, பேரணியாக சென்று ரஷ்ய தூதரகத்திலும் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம்! பகிரங்க மன்னிப்பு கோரியுள்ள அமைச்சர் (Photo) |
சேவைகள் இடைநிறுத்திய Aeroflot விமான நிறுவனம்
ரஷ்யாவின் Aeroflot விமான நிறுவனம், இலங்கைக்கான விமான சேவைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளது.
Aeroflot விமான சேவைக்கு சொந்தமான விமானத்தை ரஷ்யாவிற்கு புறப்பட அனுமதிக்காமல் கட்டுநாயக்காவில் தடுத்து வைத்தமையே இதற்கு காரணமாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அதற்கமைய, இலங்கைக்கு வர்த்தக விமானங்களை இயக்க மாட்டோம் எனவும், இலங்கைக்கான பயணத்திற்கு விமான டிக்கெட்டுகளை விற்க மாட்டோம் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விமானம் விமான ஊழியர்களுடன் மாத்திரமே பயணிக்கும் என விமான சேவை பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





நிலாவிடம் வம்பிழுத்தவர்களை தரமான சம்பவம் செய்த குடும்பத்தினர்.. அய்யனார் துணை தெறிக்கும் எபிசோட் Cineulagam

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
