தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம்! பகிரங்க மன்னிப்பு கோரியுள்ள அமைச்சர் (Photo)
ரஷ்ய விமானப் பயணிகளிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
மன்னிப்பு கோரி டுவிட்டர் பதிவு
ரஷ்யாவிற்கு சொந்தமான எயாலொப்ட் விமான சேவை விமானம் தடுத்து வைக்கப்பட்டதனால் பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்காக இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்த சம்பவம் ஓர் துரதிஸ்டவசமான சம்பவம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
The situation with regard to the grounding of the @Aeroflot_World flight is unfortunate. We apologize for the inconvenience that the passengers had to endure and we look forward to rectifying the issue and resuming flights between Colombo and Moscow quickly.
— Harin Fernando (@fernandoharin) June 4, 2022
கொழும்பிற்கும் - ரஸ்யாவிற்கும் இடையில் விமான பயணங்கள்
பிரச்சினைக்கு தீர்வு கண்டு கொழும்பிற்கும் - ரஷ்யாவிற்கும் இடையில் விரைவில் விமான பயணங்களை ஆரம்பிக்க விரும்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.