திருகோணமலை புல்மோட்டையில் பேரணி வாகனங்களுக்கு ஆணி வைத்த காடையர்கள்: மயிரிழையில் தப்பிய வாகனங்கள்
பொத்துவில் - பொலிகண்டி போராடத்தில கலந்துகொண்டிருந்த வாகனங்களை புல்மோட்டை பாலத்தில் வைத்து ஆணி மூலம் சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.
தமிழர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டம் தற்போது திருகோணமலை நகரிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இப்பேரணியில் கலந்துகொண்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தும் நோக்குடன் புல்மோட்டை பாலத்தின் மீது ஆணிகளை வைத்து சிலர் மோசமான செயற்பாட்டில் ஈடுப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதில் பேரணியில் கலந்துகொண்டிருந்த மூன்று வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இதன்காரணமாக பேரணி சற்று தாமதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி மீது திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள காடையர்களால் பரவலான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறதாக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.
ஆணி தூவப்பட்டுள்ள இடத்திற்கு அண்மையில் பொலிஸ் காவலரண் ஒன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்








அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan