இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(10.9.2026) நுவரெலியாவிற்கு விஜயம் செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க சீதையம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக செப்டம்பர் 8ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அரச தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவரது இலங்கை விஜயத்தின் இறுதி நாளான இன்றுஇ நுவரெலியா சீதா எலிய பகுதியில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயத்திற்கு அவர் விஜயம் செய்துள்ளார்.
இந்தியா – இலங்கை உறவு
இதன்போது ஆலயத்திற்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஆலய நிர்வாகத்தினரால் வரவேற்கப்பட்டதுடன்இ ஆலயத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்டு சீதையம்மனை தரிசித்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

முன்னதாக கொழும்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட இலங்கை அரசின் முக்கியஸ்தர்களை சந்தித்த ராஜ்நாத் சிங் இந்தியா – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.
மேலும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்புத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ச்சியாக சிக்கப்போகும் ராஜபக்சர்கள்! கைது குறித்து தகவல் அறிந்த குடும்பம் - அரசியலுக்கும் அஸ்த்தமனமா..




