ராஜீவ் கொலையை திட்டமிட்ட விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள் தொடர்பில் வெளிவரும் தகவல்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளளை அடுத்து, 30ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்த நளினி, முருகன் உள்ளிட்ட ஆறு பேரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளதை அவர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
மறுபக்கம், அந்த சம்பவத்தில் தங்கள் குடும்பத்தை இழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் கடுமையான விமர்சனத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
யாருக்குதான் தூக்குதண்டனை கொடுப்பார்கள்...?
ராஜீவ் காந்தி கொலையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் காவல் ஆய்வாளராக இருந்து சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற அனுசுயா எர்னஸ்ட் என்பவர் காயமடைந்துள்ளார்.
இவர் ராஜீவ் காந்தி கொலையான நேரத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர். அவர் குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ''இப்போதும் என் முகத்தில் குண்டு வெடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் உள்ளன. என் இரண்டு விரல்களை அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் இழந்தேன். இன்னும் என் உடலில் பல இடங்களில் காயம் இருக்கிறது.
எனக்கு என்ன நீதி கிடைத்துள்ளது? என்னைப் போல காயம் அடைந்தவர்கள், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு யார் நீதி வாங்கி தருவார்கள்?
ஒரு (முன்னாள்) பிரதமரை கொலை செய்தவர்களுக்கு நீதிமன்றம் விடுதலை தந்தால், யாருக்குதான் தூக்குதண்டனை கொடுப்பார்கள்? இந்த தீர்ப்பை வைத்து, இனி பலரும் தூக்குத்தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்வார்கள்.”என கூறியுள்ளார்.
மன்னிப்பது சரியான முடிவுக்காக இருக்கும்...!
இந்த கொலையை திட்டமிட்ட விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் தற்போது உயிருடன் இல்லை என ராஜீவ் காந்தி கொலையான சமயத்தில் சம்பவத்தை நேரில் பார்த்த பத்திரிகையாளர் பகவான் சிங் என்பவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“கொலையில் பலியான ராஜீவ் காந்தி குடும்பத்தினர் கூட, குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், கொலை வழக்கில் கைதானவர்கள் யாருக்கும் அந்த சம்பவம் நடக்கப்போகிறது என்று தெரியாது என்பது புலன்விசாரணையில் வெளியானது.
அதனால், அவர்களை விடுவித்துள்ளது என்பது, நம் நீதிமன்றத்தின் தன்மையை உணர்த்துகிறது. இழப்பை சந்தித்த குடும்பங்களுக்கு பெரிய வலி ஏற்பட்டுள்ளது உண்மை.
ஆனால், அதற்காக எத்தனை ஆண்டுகள் தண்டனை தந்தாலும், அது ஈடாகாது, மன்னிப்பது சரியான முடிவுக்காக இருக்கும்''என தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும்
இதேவேளை தனது குறிப்பில், பேரறிவாளன் தன்னிடம் தெரிவித்த தகவல்களை முழுமையாக பதிவு செய்யவில்லை என குற்றவாளிகளை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன் என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,“அதனால், இந்த வழக்கும், அதன் விசாரணையிலும் பல ஓட்டைகள் உள்ளன. மேலும், அதனைப் பற்றி விசாரிக்க தொடங்கபட்ட விசாரணை ஆணையமும் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை.
ஏழு பேர் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கவும் குரல் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்,''என கூறியுள்ளார்.
தகவல்-பிபிசி

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
