32 ஆண்டுகள் சிறை வாழ்க்கை என்பது புதைகுழி! மனம் திறந்த நளினி
32 ஆண்டுகள் சிறை வாழ்க்கை என்பது ஒரு சுடுகாடு, புதைகுழி, நரகம் என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்தது போல் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நளினி உள்பட ஆறு பேரையும் விடுதலை செய்து அதிரடியாக உத்தரவிட்டது.
இந்த உத்தரவையடுத்து வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் மற்றும் புழல் சிறையில் இருந்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

நளினி சிறையில் அனுபவித்த கொடுமைகள்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நளினி தான் சிறையில் அனுபவித்த கொடுமைகளை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

32 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்ட நிலையில் என்ன சந்தோஷம் உள்ளது.சிறைச்சாலைகள் கொடுமைகளை அனுபவித்தேன்.32 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டோம். இன்னும் திருப்தி இல்லையா.
எனக்காக வாதாடிய எந்த வழக்கறிஞருக்கும் நான் காசு கொடுத்ததில்லை.நான் நானாகவே இருக்கிறேன்.தமிழக மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்.மேலும் நான் சிறையில் இருந்து வெளியே வர இன்று வரை உடனிருந்து அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri