ரோஹித அபேகுணவர்த்தனவுக்கு எதிரான மனு.. உயர்நீதிமன்றின் தீர்மானம்
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனவிற்கு எதிரான, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அடிப்படை உரிமை மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் ரோஹித அபேகுணவர்த்தன ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தனர்.
முறைகேடுகள்
அதன் போது ராஜித சேனாரத்னவை விட ஒருசில வாக்கு வித்தியாசத்தில் ரோஹித அபேகுணவர்ததன வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார்.
எனினும் களுத்துறை மாவட்டதேர்தல் பெறுபேறுகளை எண்ணுவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அதன் காரணமாக ரோஹித அபேகுணவர்த்தன வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி
யும் ராஜித சேனாரத்ன அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு குறித்த மனுவை இன்று நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



