“பண்டோரா ஆவணங்களில் மேலும் 65 இலங்கையர்களின் பெயர்கள்”
பெண்டோரா ஆவணங்கள் மூலம் பணத்தை மறைத்து வைத்துள்ள மேலும் பலரின் பெயர்கள் வெளியிடப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கிடைக்கும் தகவல்களுக்கு அமைய சுமார் 65 இலங்கையர்களின் பெயர்கள் வெளியிடப்படவுள்ளன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் குறிப்பிட்ட காலவரையறை குறிப்பிடப்படவில்லை.
இதனால், எந்த காலத்தில் இந்த பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டது என்பதை கூற முடியாது எனவும் ராஜித கூறியுள்ளார்.
ரணசிங்க பிரேமதாச மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகிய ஜனாதிபதிகளின் காலத்தில் நிரூபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருகுமார் நடேசன் ஆகியோர் வெளிநாடுகளில் பணத்தை வைப்புச் செய்துள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) கூறியுள்ளமை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ராஜித சேனாரத்ன,
வர்த்தகர் ஒருவர் எங்காவது பணத்தை வைப்புச் செய்தால், அதற்கு எப்படி நாட்டின் ஜனாதிபதி பொறுப்புக் கூற முடியும் என தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி...
பெண்டோரா ஆவண விவகாரம் - ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
பெண்டோரா ஆவணங்களால் சிக்கிய நிரூபமா ராஜபக்ஷ - அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்
நிரூபமா ராஜபக்ஷவின் சொத்து பெறுமதி தொடர்பில் வெளியான தகவல்
நாட்டை விட்டு வெளியேறிய நிருபமா ராஜபக்ச? சிங்கள ஊடகம் தகவல்
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri