குடும்ப ஆட்சி காரணமாகவே ராஜபக்சக்கள் கூண்டோடு விரட்டியடிக்கப்பட்டார்கள்! விமல் வீரவன்ச

Mahinda Rajapaksa Sri Lanka Politician Wimal Weerawansa Sri Lanka Rajapaksa Family
By Rakesh Dec 06, 2022 12:59 PM GMT
Report

"ராஜபக்சக்கள் மீண்டும் 2019 இல் ஆட்சிக்கு வந்த போது அவர்கள் திருந்துவார்கள் என்று நாங்கள் மட்டுமல்ல மக்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்கள் திருந்தவில்லை. அதனால்தான் அவர்களை மக்கள் கூண்டோடு விரட்டியடித்தார்கள்." என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நீங்கள் ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்குப் பாடுபட்டீர்கள். ஆனால், இறுதியில் அவர்களை நீங்கள் வெறுத்தமைக்குக் காரணம் என்ன? அவர்களை மக்கள் விரட்டியடிக்கக் காரணம் என்ன?' என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே விமல் வீரவன்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

குடும்ப ஆட்சி காரணமாகவே ராஜபக்சக்கள் கூண்டோடு விரட்டியடிக்கப்பட்டார்கள்! விமல் வீரவன்ச | Rajapaksas Thrown Out Family Rule Wimal Weeravansa

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ச - கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் இந்த நாட்டில் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியவர்கள். அப்படியான தலைவர்களைத் தோல்வியடைந்த தலைவர்களாக வீட்டுக்கு அனுப்பிவைக்க நாம் விரும்பவில்லை.

ஆனால், அவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் இறுதியில் எல்லாம் தலைகீழாக மாறின . மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருக்கும் போதே கௌரவமாக ஓய்வு பெற வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.

ராஜபக்ச குடும்ப ஆட்சி

குடும்ப ஆட்சி காரணமாகவே ராஜபக்சக்கள் கூண்டோடு விரட்டியடிக்கப்பட்டார்கள்! விமல் வீரவன்ச | Rajapaksas Thrown Out Family Rule Wimal Weeravansa

2015இல்தான் ராஜபக்ச குடும்ப ஆட்சி பற்றிப் பரவலாகப் பேசப்பட்டது. அதனால் அந்தக் குடும்பம் தோல்வியடைந்தது. மீண்டும் 2019 இல் ஆட்சிக்கு வந்தபோது அவர்கள் திருந்துவார்கள் என்று நாங்களும் மக்களும் நினைத்தோம்.

அது நடக்கவில்லை. 2015 இற்கு முன் ராஜபக்ச குடும்பத்தில் 3 பேர்தான் அமைச்சர்கள் 2019 இல் 5 பேர் அமைச்சர்கள். குடும்ப ஆட்சியில் அக்கறை செலுத்திய ராஜபக்சக்கள், நாட்டினதும் மக்களினதும் நலன்களில் எந்தக் கவனமும் செலுத்தவில்லை.

முன்னர் (2015 இற்கு முன்) போன்றே செயற்பட்டார்கள். இதனால் சீற்றமடைந்த மக்கள், ராஜபக்சக்களைக் கூண்டோடு விரட்டியடித்தார்கள் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US