தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே ராஜபக்சவினர் ரணிலுக்கு ஆதரவு : ரத்ன தேரர் சுட்டிக்காட்டு
ராஜபக்ச தரப்பினர் உள்ளிட்ட மொட்டுக் கட்சியினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்து வருவதாக ரத்ன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள மொழிப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நடமாடும் சூழல்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பசில் ராஜபக்ச உள்ளிட்ட மொட்டுக் கட்சியினருக்கு எதுவித அச்சுறுத்தலும் இல்லாது நடமாடும் சூழல் நிலவ வேண்டும்.

ரணில் இல்லாவிட்டால் மொட்டுக் கட்சியில் பலர் தற்போதைக்கு சிறைச்சாலைகளில் இருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும்.
அதற்காகவே அவர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்கின்றனர். அதே நேரம் தங்கள் கட்சிக்கு வெளியில் பலமான ஒரு தலைவர் உருவாகி விடக் கூடாது என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam