கொழும்பில் 400 மில்லியன் ரூபா செலவில் ராஜபக்சவினர் கொள்வனவு செய்த வீடு!

Colombo Basil Rajapaksa Gotabaya Rajapaksa Namal Rajapaksa Sri Lanka
By Dhayani Aug 26, 2022 04:00 AM GMT
Report

ராஜபக்ச குடும்பத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு - கிரிமண்டல மாவத்தையில் 400 மில்லியன் பெறுமதியான காணி மற்றும் வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது கருத்துரைக்கும் போதே இந்த தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் பில்லியன் கணக்கில் ராஜபக்சவினர் சொத்துக்களை சேகரித்துள்ளனர். இவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமைக்கான காரணம் என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பில் 400 மில்லியன் ரூபா செலவில் ராஜபக்சவினர் கொள்வனவு செய்த வீடு! | Rajapaksa S House Purchase Cost 400 Million Rupees

400 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு

நாடு நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 400 மில்லியன் ரூபா பெறுமதியான வீட்டினை கொள்வனவு செய்துள்ளனர். அந்தக் குற்றங்களுக்காக அனைத்து ராஜபக்சக்களும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

கொழும்பில் 400 மில்லியன் ரூபா செலவில் ராஜபக்சவினர் கொள்வனவு செய்த வீடு! | Rajapaksa S House Purchase Cost 400 Million Rupees

நாட்டில் இதுவரை பல பில்லியன் கணக்கில் சொத்துக்களை சேகரித்தமை மற்றும் சட்டவிரோத செயல்களில் ராஜபக்சவினர் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர்.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டதை போன்று இலங்கையில் தவறான முறையில் சொத்துக்களை குவித்த ராஜபக்ச குடும்பத்தின் கோட்டாபய ,மகிந்த,பசில்,நாமல் உட்பட அனைத்து ராஜபக்சக்களும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 400 மில்லியன் ரூபா செலவில் ராஜபக்சவினர் கொள்வனவு செய்த வீடு! | Rajapaksa S House Purchase Cost 400 Million Rupees

காலிமுகத்திடல் அமைதியின்மைக்கு காரணம்

மேலும், காலி முகத்திடலில் அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே 9 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னகோன் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் 400 மில்லியன் ரூபா செலவில் ராஜபக்சவினர் கொள்வனவு செய்த வீடு! | Rajapaksa S House Purchase Cost 400 Million Rupees

போராட்டக்காரர்கள் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்த தேசபந்து தென்னகோன், பின்னர் அமைதி ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் நடத்த அனுமதித்தமை முற்றிலும் தவறவான விடயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ச ஆதரவாளர்களை முதலில் ‘மைனாகோகம’ மீது தாக்க அனுமதித்தவரும், பின்னர் காலி முகத்திடலின் பிரதான போராட்ட தளத்தை நோக்கி அவர்களை செல்ல அனுமதித்தவரும் தென்னகோன் என்றும் தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US