Pandora papers அம்பலப்படுத்திய ரகசியங்கள் - இலங்கையில் சிக்கிய ராஜபக்ஷ குடும்பம்
உலகளாவிய ரீதியில் மறைக்கப்பட்ட சொத்துக்கள் அடங்கிய ஆவணங்களை Pandora papers வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் (Nirupama Rajapaksa) பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சமகால ஆட்சியாளர்களான ராஜபக்ஷ சகோதர்களின் நெருக்கிய உறவினர் ஆவார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட நிருபமா 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரை நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் பிரதி அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
2016 ஆம் ஆண்டில் நிருபமாவின் சகோதரான பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) சம்பந்தப்பட்ட ஒரு ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் தொடர்பாக அவர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் மாளிகை ஒன்று கட்டுவதற்காக பொது மக்களின் நிதியை பயன்படுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளது. நிருபமாவின் கணவரான நடேசன் மற்றும் சமகால நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் தாம் தவறு செய்யவில்லை என மறுத்துள்ளனர்.
நிருபமா ராஜபக்ஷவும் அவரது கணவர் நடேசனும் சேர்ந்து லண்டன் மற்றும் சிட்னியில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்து முதலீடு செய்ய, ஒரு ஷெல் நிறுவனத்தை நிர்வகித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
ஷெல் நிறுவனங்கள் (shell companies) மோசடி அல்லது வரி ஏய்ப்பு, பயங்கரவாதத்திற்கான நிதி சேகரித்தல் போன்ற நோக்கங்களுடன், பணத்தை திரட்டும் நிறுவனங்களாகும்.
நிருபமா தொடர்பில் Pandora papers வெளியிட்ட ஆவணம்
தொடர்புபட்ட செய்திகள்
இலங்கை உட்பட 99 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சி - பல ரகசியங்களை அம்பலப்படுத்தும் Pandora Papers
நிதி தொடர்பில் மில்லியன் கணக்கில் கசிந்த முக்கிய இரகசிய ஆவணங்கள்!