ராஜபக்ச குடும்பம் மிக விரைவில் வீடு செல்வது உறுதி: சுனில் ஹந்துன்நெத்தி(Photos)

Parliament People Gotapaya rajapaksa Dollars Sunil Handunetti
By Independent Writer Jan 21, 2022 12:33 PM GMT
Report

ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரையானது ஒரு பொறுப்பற்ற உரை ஆகவே நாங்கள் பார்க்கின்றோம் என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இந்த ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாகத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாடு இன்று இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் ஒரு உரையை ஆற்றுவதாக இருந்தால் அது பலரிடமும் ஆராய்ந்து பேசவேண்டும். நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சானது ஒரு பொறுப்பற்ற செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம். இந்த ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆட்சியை எவ்வாறு மாற்றுவது என்று மக்கள் எங்களிடம் கேட்கின்றனர்.

அவர்களிடம் நான் கேட்கின்றேன், இன்று ஆட்சி செய்வது யார் கோட்டாபய குடும்பத்தினர் மட்டும் தானே. ஆகவே மிக விரைவில் இந்த ஆட்சியாளர்கள் வீடு செல்வார்கள்.

இன்று நாட்டில் அரிசி, உரம் , டொலர் பிரச்சனை இவை எல்லாமே ஒரு நாடகமாகத் தான் நாங்கள் பார்க்கின்றோம். ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒன்று சேர்ந்தவர்கள் இன்று பல கதைகளைக் கூறுகின்றனர். தெற்கு வர்த்தகர்கள் கூறுவதைத் தான் கிழக்கிலுள்ள வர்த்தகர்களும் கூறுகின்றனர். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும்.

இன்று எல்லாவற்றுக்கும் விலைவாசி அதிகரித்துக் காணப்படுகின்றது. வாங்குவதற்குப் பொருள் இல்லை, எரிவாயு வெடிப்பு என்கின்றார்கள், இது எல்லாமே ஒரு நாடகம். இலங்கையில் டொலர் இல்லை என்பவர்கள் பாலங்களை அமைக்கின்றார்கள், வீதிகளை அமைக்கிறார்கள், சொகுசு வாகனங்கள் இறங்குகின்றனர், பாதுகாப்புக்குப் பல வாகனங்களில் செல்கின்றார்கள்.

டொலர் இல்லை என்றால் எவ்வாறு இப்படிச் செயல்பட முடியும்? இந்த ராஜபக்ச குடும்பத்தின் நாடகத்தை மக்கள் தற்போது உணர்ந்து வருகின்றனர். அதை மிக விரைவில் ராஜபக்ச குடும்பத்தினருக்கு மக்கள் தக்க பாடம் படிப்பிக்கக் காத்திருக்கிறார்கள். என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஆகவே கிழக்கு மாகாணத்திலுள்ள குறிப்பாக மட்டக்களப்பு மக்களும் எங்களோடு சேர்ந்து நாங்கள் விட்ட பிழைகளையும் எதிர்காலத்தில் நாங்கள் செய்யக்கூடிய விடயங்களையும் கலந்து ஆலோசித்துப் பேசி ஒரு நல்லதொரு ஆட்சியை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US