கடுமையான மன அழுத்தத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த..
இலங்கை அரசியல் வரலாற்றில் ராஜபக்சக்களின் நிலை ஒரு பரிதாபமான கட்டத்தை எட்டியுள்ளது என்றே கூறலாம்.
முன்னாள் முதற்பெண்மனி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச இருவரும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராஜபக்சக்களின் சாம்ராஜ்ஜியத்திற்கு இது ஒரு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.
அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச குறித்து பல சுகாதார பிரச்சினைகள் முன்வைத்தும் நீதிமன்றம் அவற்றை நிராகரித்துள்ளது.
இது அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆதாரங்களும் மற்றும் சாட்சிகளும் தொடர்பான தீவிரத்தன்மையை எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.
இவ்வாறிருக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாக மொட்டுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan