வெள்ளைக்கொடியோடு சரணடைய வந்தவர்கள் தொடர்பில் மகிந்த இட்ட கட்டளை! நாமல் அறிந்த கதைகள்
இறுதிப் போரின் போது விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் புதியவை அல்ல எனவும், ராஜபக்சக்கள் கொலையாளிகள் அல்லர் என்பதை அவரே இப்போது நிரூபித்துள்ளார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
பொன்சேகாவின் சர்ச்சை கருத்து முன்னதாக ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இறுதிப் போரின் போது விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவது குறித்து ராஜபக்ச குடும்பத்தினர் பேச்சு நடத்தினார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
மகிந்தவின் உத்தரவும் நாமலின் தகவலும்
"விடுதலைப்புலிகள் மூன்றாம் தரப்பிடம் சரணடைய விரும்பினர், ஆனால் ராஜபக்சக்கள் அவர்கள் இராணுவத்திடம் சரணடைய வேண்டும் என வலியுறுத்தினர். அந்தத் திட்டம் தோல்வியடைந்ததாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டன. அவர்கள் சரணடைந்திருந்தால் பிரபாகரன் இன்று வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார்." என்றும் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

பொன்சேகாவின் இந்த கூற்றுத் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ச எம்.பி,
"விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்று அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்திருந்தார். எனவே, பொன்சேகா கூறுவது ஒன்றும் புதிய தகவல் அல்ல.
வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை மகிந்த ராஜபக்ச கொலை செய்யச் சொன்னார் என்று முன்னர் கூறிய பொன்சேகா, இப்போது அதற்கு முரணான கருத்தை வெளியிடுகின்றார்.

எது எப்படியிருந்தாலும், ராஜபக்சக்கள் கொலையாளிகள் அல்ல என்பதையும், அவர்கள் போரை அமைதியான முறையில் முடிக்கவே முயற்சித்தனர் என்பதையும் உறுதிப்படுத்தியமைக்காக பொன்சேகாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
குறைந்தபட்ச உயிரிழப்புகளுடன் போரை முடிக்கவே மகிந்த ராஜபக்ச விரும்பினார். தமிழ் மக்களுக்கு எதிராக ஒருபோதும் போர் தொடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புக்கள்! கைதான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தொடர்பில் மன்னர் சார்ள்ஸின் அறிவிப்பு
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam