ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் முடிவுக்கு வரும் - ஆரூடம் கூறிய ஜோதிடர்
2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் ஒரு மன்னன் அவதரிப்பார் என கொரோனா பாணி தயாரித்த ஆன்மீகவாதியான ரிட்டிகல தேவிந்த ஆரூடம் கூறியுள்ளார்.
அவர் இளவரசர் தியசேன என்று சிலரால் அழைக்கப்படும் நபர் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பாரிய பொருளாதார, கலாச்சார மற்றும் மனித வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2030ஆம் ஆண்டு மன்னரின் வருகையுடன் ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் முடிவுக்கு வரும் என ரிட்டிகல தேவிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
2025ஆம் ஆண்டு மீண்டும் ராஜபக்ஷ தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என்றும் அப்போது ராஜபக்ச பரம்பரையின் அரசியல் முடிவுக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணியினால் நாட்டில் அதிகாரத்தை பெற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.