ராஜாங்கனை தேரரின் மனநல அறிக்கை.. சிஐடிக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு
ராஜாங்கனையைச் சேர்ந்த சத்தாரதன தேரர் ஆபாசமான மற்றும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி காணொளிகளை வெளியிட்டமை தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு குற்றபுலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் இன்று (09) குற்றப் புலனாய்வுத் துறைக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மருத்துவ அறிக்கை
ராஜங்கனையே ஹமுதுருவோ என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளிகளில் ஆபாசமான மற்றும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் சத்தாரதன தேரருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த தேரர், ஆபாசமான மற்றும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திமை குறித்து நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் மனநல பிரிவில் முன்னிலையாகி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிள்ளையானுக்கு எதிராக வாக்குமூலம் வழங்க தயாராக இருக்கும் அவரின் நெருங்கிய சகா! தயக்கம் காட்டும் அரசாங்கம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
