நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு மேல் மழை
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாணம் மற்றும் வவுனியா, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சபரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டம் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 7 மணி நேரம் முன்
6 நாள் முடிவில் வெற்றிநடைபோடும் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது செய்த மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri