நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
இலங்கையை அண்மித்த பகுதிகளில் நிலவும் குறைந்த வளிமண்டல அழுத்தம் காரணமாக அடுத்த சில நாட்களில் வானிலையில் சீா்கேடு ஏற்படும் என்று வானிலை மையம் எதிா்வுகூறியுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும்.
மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100
மில்லிமீற்றருக்கும் அதிக மழைப் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எதிர்வு
கூறியுள்ளது.
புதிய இணைப்பு
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேல், தென், சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் சாத்தியம் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், நாட்டின் பல பகுதிகளிலும் மேக மூட்டத்துடனான வானிலை நிலவக்கூடும்.
இதேவேளை கடல் பகுதிகளில் பல இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
திருகோணமலை, காங்கேசன்துறை கடற்பரப்புகளில் இருந்து காற்று வடக்கு நோக்கி வீசும் சாத்தியம் நிலவுகிறது.
நாட்டின் ஏனைய கடற்பகுதிகளில் 15 - 25 கிலோமீற்றர் வரையில் காற்றின் வேகம் இருக்கக்கூடும்.
இது காலி முதல் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையில் 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
