இடியுடன் கூடிய கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது மழை
ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
நாமலுக்கு இந்திய குடியரசு தின நிகழ்வுக்கு இராஜதந்திர அழைப்பு விடுக்கப்படவில்லை:சர்ச்சையை கிளப்பியுள்ள பதிவு..