கொட்டித் தீர்த்த மழை: மகிழ்ச்சியில் யாழ்ப்பாண மக்கள்
யாழ்ப்பாண மக்கள் நீண்ட மாதங்கள் இடைவெளியின் பின்னர் பெய்த மழையினால் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக நிலவிய அசாதாரண வெப்பநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விலங்குகள் உட்பட மனிதர்களும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
திருப்திகரமான மழை வீழ்ச்சி
இந்த வெப்பத்தால் நீர் நிலைகள் வரண்டு போயிருந்தது. பயிர்கள் நீரில்லாமல் கருகிப் போயிருந்தன. குடிநீருக்கு கூட தட்டுப்பாடு நிலவி வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டின் சில பகுதிகளிலும் மழை பெய்து வந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக வெப்பமே நிலவி வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் நீண்ட மாதங்கள் இடைவெளியின் பின்னர் திருப்திகரமான மழை வீழ்ச்சி பதிவாகியது.
இதனால் யாழ்ப்பாண பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
