உரிய தீர்வு கிடைக்காவிட்டால் ஒரு வார வேலை நிறுத்தம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உரிய தீர்வு கிடைக்காவிட்டால், ஒரு வார கால வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு இன்று (11.05.2023) கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அடையாள வேலைநிறுத்தம்
எதிர்வரும் செவ்வாய்கிழமை (16.05.2023) அமைச்சருடனான கலந்துரையாடலில் நல்ல பதில் கிடைக்கும் என நம்புகின்றேன்.
"நேற்று (10.05.2023) இரவு 12 மணியளவில் அடையாள வேலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக முடிவடைந்தது.
அமைச்சின் செயலாளர் தலையிட்டு தொடருந்து பொது மேலாளருக்கு அறிவுறுத்தல் வழங்குவார் என நம்புகிறோம்.
அமைச்சர் செவ்வாய்கிழமை எங்களிடம் உத்தியோகபூர்வ கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளார்.
எனவே கலந்துரையாடலின் போது தீர்வு கிடைக்கவில்லை என்றால் எந்தவொரு நேரத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல நாம் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
தகுதியற்ற அதிகாரி
தொடருந்து திணைக்களத்தின் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பதவிக்கு தகுதியற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தி, நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று முன்தினம் (9.05.2023) நள்ளிரவு 12 மணிக்கு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தன.
இதன் காரணமாக 10 அலுவலக தொடருந்துகள், 5 நீண்ட தூர தொடருந்துகள் மற்றும் 7 இரவு தபால் தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டன.
வேலைநிறுத்தம் காரணமாக தொடருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சில இடங்களில் பயணச்சீட்டு கூட வழங்கப்படவில்லை. இதனால் தொடருந்து பயணிகள் இலவசமாக தொடருந்துகளில் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
