தொடருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது
தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை தற்போது கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் இன்று (05.10.2023) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து தொடருந்து கட்டுப்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாளிகாவத்தை தொடருந்து வீதியின் நுழைவாயிலில் வைத்து தொடருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவரை தாக்கியதை அடுத்து தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (04.10.2023) முதல் பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும், கொழும்பு கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களுக்கு பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தொடருந்து சேவைகள் இரத்து
இந்நிலையில், தொடருந்து உதவி பாதுகாவலர்களின் விடுமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அனைத்து உதவிக் காவலர்களும் நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென தொடருந்து பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.
இதன் காரணமான நேற்று சுமார் 78 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டதுடன் பல தொடருந்துகள் தாமதமாக இயக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுகின்றது.
அத்துடன், கொழும்பு கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களுக்கு பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |