முடங்கவுள்ள தொடருந்து சேவைகள்: பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு
தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக தொடருந்து சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கொழும்பு கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களுக்கு பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
அனைத்து தொடருந்து சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடருந்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பின் காரணமாக இன்று (04.10.2023) மாலை சேவையில் ஈடுபடவிருந்த அனைத்து தொடருந்துகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று மாலை 4 மணிக்கு பின்னர் சேவையில் ஈடுபடவிருந்த சுமார் 20 ற்கும் மேற்பட்ட தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    
    
    
    
    
    
    
    
    
    மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri