லிட்ரோவை அடுத்து லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு விலையை அதிகரித்தது
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லாஃப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய விலை விபரம்
இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 3985 ரூபாவாகும்.
லாஃப்ஸ் நிறுவனம் 5 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 60 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் புதிய விலை 1595 ரூபாவாகும்.

அத்துடன், லாஃப்ஸ் நிறுவனம் 2 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 24 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அதன் புதிய விலை 638 ரூபாவாகும்.
இதேவேளை, இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரும் லிட்ரோ நிறுவனமும் எரிவாயுவின் விலையை அதிகரித்து இன்று பிற்பகல் அறிவிப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam